Destiny 2 விளையாட்டைக் கைகாவிட்டுவிட்டதாகத் தோன்றிய சில மாதங்களுக்குப் பிறகு, தற்போது அவுட்-ஆஃப்-டேட் ஆன (vaulted) பழைய கேம்பெய்ன்கள், லொகேஷன்கள் மற்றும் ரெய்டுகளை மீண்டும் கொண்டுவரப் போவதாக Bungie நிறுவனம் அறிவித்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 'Destiny Content Vault' முறையை இந்நிறுவனம் இப்போது மாற்றிமைத்துள்ளது. பிளேயர்கள் பணம் கொடுத்து வாங்கிய பழைய கண்டெண்டுகளை அந்த அமைப்பு நீக்கியது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Destiny கேமில் இருந்து சில முக்கிய அம்சங்களை நீக்கியது வீரர்களின் நம்பிக்கையையும் குதூகலத்தையும் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்று Bungie நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நாங்கள் எடுத்த முடிவை இப்போது மாற்ற முடியாது என்றாலும், அது ஏற்படுத்திய தாக்கத்தை உணர்கிறோம். Destiny-யின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள அந்த முக்கியமான பகுதிகளை மீண்டும் கொண்டு வருவதன் மூலம், வீரர்களிடம் செய்த தவறைச் சரிசெய்ய முழு முயற்சியும் எடுப்போம்.
Comments
No comments yet — be the first.