அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள 40 மில்லியன் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான கொலராடோ நதியைப் பாதுகாக்க, Amazon நிறுவனம் 20 மில்லியன் டாலர் செலவிடத் திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் வற்றிவரும் இந்த நதியைப் பாதுகாக்க பல்வேறு நீர் பாதுகாப்புத் திட்டங்களை அந்நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.
அமேசான் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் டேட்டா சென்டர்கள் மூலம் அதிகளவு தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில்தான் அமேசான் இந்த புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் மூலம் பயன்படுத்தும் தண்ணீரைவிடக் கூடுதலாகச் சேமித்து, இந்த தசாப்தத்தின் முடிவுக்குள் 'வாட்டர் பாசிட்டிவ்' (water positive) நிறுவனமாக மாறுவதை அமேசான் இலக்காகக் கொண்டுள்ளது. இது தொடர்பான சில விவரங்களை அமேசான் சமீபத்தில் வெளியிட்டிருந்தாலும், சுற்றுச்சூழலில் இந்நிறுவனத்தின் தாக்கம் குறித்த முழுமையான படம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Comments
No comments yet — be the first.