அமெரிக்காவில் உள்ள சில iPhone 18 Pro Max பயனர்களுக்கு, AT&T நெட்வொர்க் இணைப்பு மற்றும் eSIM அமைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக MacRumors Forums, Reddit மற்றும் Apple Support Community தளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.
AT&T நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இன்டர்நெட் டேட்டாவைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த மாதம் வெளியான புதிய மாடல்களில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் iPhone 18 Pro Max-ல் மட்டுமே Qualcomm செல்லுலார் மோடம் இடம்பெற்றுள்ளது. மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் iPhone 18 Pro Max மற்றும் சிறிய அளவிலான iPhone 18 Pro, iPhone Duo ஆகிய அனைத்து மாடல்களிலும் Apple நிறுவனத்தின் சொந்த C2 மோடமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதற்கு இதுதான் காரணமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Apple நிறுவனம் தற்போது iOS 27.0.1 பதிப்பைச் பரிசோதித்து வருகிறது. இது அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. AT&T நெட்வொர்க் சிக்கல்களுக்கு இதில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
Comments
No comments yet — be the first.