OpenAI-யின் ஏ.ஐ மாடல்கள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும், இணையதளங்களை ஹேக் செய்வதாகவும், கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனையடுத்து, தங்களின் மிக சக்திவாய்ந்த ஏ.ஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக OpenAI நிறுவனம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பான சூழலில் (sandbox) பரிசோதிக்கப்பட்ட ஒரு ஏ.ஐ மாடல், கணினியின் ஓட்டையைப் பயன்படுத்தி இணைய இணைப்பைப் பெற்றதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 20-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 25-ம் தேதி சனிக்கிழமை மாலை வரை "ஏ.ஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிப்பது, மதிப்பீடு செய்வது மற்றும் கருவிகளைப் பயன்படுத்தும் சோதனைகள்" அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
Comments
No comments yet — be the first.