OS 27 அப்டேட்களில் Siri AI அதிகாரப்பூர்வமாக வந்துவிட்ட நிலையில், Apple நிறுவனம் விரைவில் HomePod மற்றும் HomePod mini-க்கான புதிய அப்டேட்களை வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. விரைவில் வெளிவரவிருக்கும் இந்தச் சாதனங்களில் என்னென்ன மாற்றங்கள் இருக்கலாம் என்பது குறித்த சில புதிய தகவலlகள் வெளியாகியுள்ளன.
MacRumors தளத்தின் செய்திப்படி, புதிய HomePod mini பற்றிய விவரங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் கோடிங்கில் கசிந்துள்ளன. ஆரோன் பெர்ரிஸ் என்ற ஆய்வாளர், புதிய ஸ்பீக்கர் வரவிருக்கும் வண்ணங்களைக் குறிக்கும் ஐகான்களைக் கண்டுபிடித்துள்ளார். இதன்படி, புதிய மாடல் கருப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். அதாவது, தற்போதுள்ள ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் நிறுத்தப்படலாம். மேலும், புதிய நீல நிறம் சற்று வெளிச்சமான ஷேடில் இருக்கும் என்றும், கருப்பு மற்றும் மிட்நைட் நிறங்கள் வழக்கம்போலவே தொடரும் என்றும் அந்தப் படங்கள் காட்டுகின்றன.
துல்லியமான கசிவுகளை வெளியிடுவதில் அறியப்பட்ட itspdfu இன் எக்ஸ் பதிவு மூலம் இரண்டாவது தகவல் வெளியாகியுள்ளது. HomePod சாதனங்களுக்கான வரவிருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான audioOS27, Siri AI-ஐ ஆதரிப்பதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Siri AI ஆதரவுடன், புதிய HomePod சாதனத்தின் டிஸ்ப்ளேவில் புதிய அனிமேஷன்களும் இடம்பெறும்.
Get ready for Siri AI on HomePod.
audioOS 27 includes Linwood, the system behind Siri AI, plus a new look and sound for Siri on HomePod. May require new hardware.
The new status lights emphasize white, blue and orange, matching Siri AI’s palette on other devices.
— pdfu (@itspdfu) September 23, 2026
itspdfu-ன் அறிக்கையில் உள்ள ஒரு முக்கியமான கவலை என்னவென்றால், இந்த புதிய வசதிக்கு கூடுதல் ஹார்டுவேர் (hardware) தேவப்படலாம். அப்படிப்பட்ட சூழலில், பழைய HomePod மாடல்களில் Siri AI கிடைக்காமல் போகலாம். ஆப்பிள் நிறுவனம் தனது முதல் HomePod-ஐ 2018-ல் வெளியிட்டது. மூன்று ஆண்டுகள் விற்பனையில் இருந்த பிறகு அதன் உற்பத்தியை நிறுத்தியது. பின்னர் 2023-ல் அதன் புதிய பதிப்பை வெளியிடப்பட்டது, அது தற்போது விற்பனையில் உள்ளது.
புதிய HomePod mini பற்றி Itspdfu அறிக்கையில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. என்றாலும், அதில் Siri AI வசதி இடம்பெறலாம் என்று நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. மேலும், Siri AI வசதியுடன் கூடிய புதிய Apple TV 4K மாடலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள எந்தச் சாதனமும் Apple Intelligence அல்லது புதிய Siri வசதியை ஆதரிக்கவில்லை.
ஸ்மார்ட் ஹோம் சந்தையில் பெரிய அளவில் களமிறங்க Apple நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய HomePods சாதனங்களுடன், வீட்டிலுள்ள அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்தும் "ஹோம் ஹப்" (home hub) என்ற புதிய சாதனத்தையும் அது அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய சாதனங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட Apple திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) பத்திரிகையாளர் மார்க் குர்மன் (Mark Gurman) தெரிவித்துள்ளார்.
Comments
No comments yet — be the first.