Apple நிறுவனத்தின் தகவலின்படி, iPhone 18 Pro Max மாடல்களில் ஒரு புதிய பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, போன் தயாரிக்கப்பட்டதில் இருந்து வாடிக்கையாளரிடம் சேரும் வரை, அதன் பேட்டரி திறன் 20Wh-க்குக் குறைவாகவே இருக்கும் வகையில் ஃபார்ம்வேர் மூலம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். வாடிக்கையாளர் தனது iPhone-ஐ ஆன் செய்து இயக்கியதும், இந்த வரம்பு நீக்கப்பட்டு முழுமையான பேட்டரி திறன் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இன்னும் இயக்கப்படாத அல்லது பெட்டியிலேயே இருக்கும் போன்கள் ஏற்கனவே 20Wh-க்குக் கீழ் வரம்பிடப்பட்டிருப்பதால், அவற்றை அனுப்புவதற்கு முன்பு தனியாக தயார்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
iPhone 18 Pro Max-ஐ பழுதுநீக்கம் (repair), எக்ஸ்சேஞ்ச் அல்லது பிற தேவைகளுக்காக அனுப்பும் வாடிக்கையாளர்கள், புதிய Prepare to Ship அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த Prepare to Ship அம்சம் பேட்டரி திறனை 20Wh-க்குக் கீழே இறக்கி, ஷிப்பிங் செய்யும் போது ஐபோன் அந்த வரம்பிற்க்குள்ளேயே இருக்க ஒரு சார்ஜ் வரம்பை (charge limit) நிர்ணயிக்கிறது.
புதிய ஐபோனுக்கு மாறும்போது உங்களின் பழைய ஐபோனை எளிதாக அனுப்பும் வகையில் Settings > General > Transfer or Reset iPhone > Prepare to Ship என்ற புதிய வசதியை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரியை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்போது இந்தச் செயல்முறையின்போது ஐபோன் "வழக்கத்தை விடச் சற்று சூடாகலாம்" என்றும் ஆப்பிள் எச்சரிக்கிறது. இது முடிந்ததும், Settings பகுதியில் "Ready to Ship" என்ற நிலை காட்டப்படும்.
Prepare to Ship ஆப்ஷனை மாற்ற விரும்பினால், Settings பகுதியில் அதற்கான ரத்து செய்யும் வசதியும் உள்ளது. பயனர்கள் தேர்வு செய்த காரணத்தைப் பொறுத்து, அதை மாற்றுவதற்கு முன் 14 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
டிரான்ஸ்போர்ட் மற்றும் விமானப் பயணங்களின் போது iPhone 18 Pro Max பாதுகாப்பானது என்றும், ஷிப்பிங் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காகவே இந்த வரம்பு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் Apple தெளிவுபடுத்தியுள்ளது. வேறு எந்த iPhone மாடல்களிலும் 20Wh-க்கும் அதிகமான சிங்கிள்-செல் பேட்டரி இல்லாததால், இந்த நடைமுறை மற்ற மாடல்களுக்குத் தேவையில்லை.
Comments
No comments yet — be the first.