ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை iPad mini-யில் A20 Pro சிப், மாற்றியமைக்கப்பட்ட செல்ஃபி கேமரா மற்றும் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகியவை இடம்பெற உள்ளதாக கசிந்துள்ள கோடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல்கள் Apple நிறுவனத்தின் சொந்தக் குறியீட்டிலிருந்தே கசிந்துள்ளன. இதை MacRumors தளத்தின் பங்களிப்பாளர் Aaron Perris கண்டுபிடித்துள்ளார். மேலும், புதிய iPad mini பற்றிய தெளிவான படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தப்படங்களில் சாதனத்தின் முன்பகுதி மட்டுமே தெரிவதால், அதன் பின்பக்கத்திலோ அல்லது பக்கவாட்டிலோ என்னென்ன வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. இருப்பினும், சில மாற்றங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன.
புதிய iPad mini-ல் கிடைமட்டமாக (landscape) பொருத்தப்பட்ட முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், அனைத்து iPad மாடல்களுமே இந்த கேமரா அமைப்பிற்கு மாறியுள்ளன. மேலும், iPhone-ஐப் போலவே இதன் டிஸ்ப்ளே கண்ணாடியின் மேற்பகுதியில் சிறிய பள்ளம் போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது; இது ஸ்பீக்கருக்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வழக்கம்போல ஒலியளவைக் கட்டுப்படுத்தும் பொத்தான்களும் (volume buttons), பவர் பட்டனும் சாதனத்தின் மேற்பகுதியிலேயே தொடர்கின்றன.
அந்தக் கோப்புகள் பற்றிய முழுமையான விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இருப்பினும், Apple நிறுவனத்தின் கோடிங்கில் இந்தக் கோப்புகள் இடம்பெற்றுள்ளதால், அந்தப் புதிய தயாரிப்பு விரைவில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது.
புதிய தலைமுறை iPad mini-யில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (water resistance) மற்றும் அதிர்வு அடிப்படையிலான (vibration-based) ஸ்பீக்கர் இடம்பெறும் என்று Bloomberg-ன் Mark Gurman ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகி உள்ள ஐகான்களும் இந்தத் தகவலை உறுதிப்படுத்துவதுபோல் உள்ளன.
புதிய iPad mini மாடலில் சற்று பெரிய ஸ்கிரீன், OLED டிஸ்ப்ளே மற்றும் பல புதிய வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று மார்க் குர்மன் கணித்துள்ளார்.
Comments
No comments yet — be the first.