ஹேப்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான Taction, ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டு காப்புரிமைகளை மீறியதாகக் கூறி 2021-ல் வழக்கு தொடர்ந்தது. தற்போது சான் அடியாகோவைச் சேர்ந்த மத்திய நீதிமன்ற நடுவர் குழு, Taction நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது. சி.என்.பி.சி (CNBC) ஊடகத்தின் செய்திப்படி, "சாதனங்கள் இயங்குவதை பயனர் உணரும் வகையில் அதிர்வு தொழில்நுட்பம் தொடர்பான அமெரிக்கக் காப்புரிமை எண்கள் 10,659,885 மற்றும் 10,820,117 ஆகியவற்றை மையமாகக் கொண்டே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apple Watch மற்றும் iPhone-களில் பயன்படுத்தப்படும் Taptic Engine தொழில்நுட்பம் தங்களுடைய காப்புரிமையை (patent) முறையான அனுமதியின்றி மீறிவிட்டதாக Taction நிறுவனம் தொடுத்த வழக்கில், ஜூரி அதையே உறுதி செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இரண்டு காப்புரிமைகளில் உள்ள விதிகளை மீறியுள்ளதாக அந்த விசாரணைக் குழு தீர்ப்பளித்துள்ளது.
Comments
No comments yet — be the first.