மனித இனம் அழிந்துபோவதற்கான வாய்ப்பு ஒரு நாணயத்தைச் சுண்டிப் போடுவதைப் போன்றது (தலை அல்லது பூ) என்று OpenAI மற்றும் Google DeepMind நிறுவனங்களின் முன்னாள் ஊழியரான Geoffrey Irving அண்மைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். OpenAI, Google மற்றும் Anthropic ஆகிய நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் உட்பட பல AI ஆராய்ச்சியாளர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களில் இதுவும் ஒன்றாகும். AI இன் திறன்கள் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து ஆய்வு செய்யும் Palisade Research என்ற லாப நோக்கற்ற அமைப்பு, இந்த நேர்காணல்களைச் சேகரித்து frominside.ai என்ற தளத்தில் வெளியிட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தால் மனிதகுலத்திற்கே ஆபத்து ஏற்பட்டு, மனித இனம் அழியும் அபாயம் உள்ளதாக சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind) நிறுவனத்தின் ஆய்வாளரான நீல் நந்தா (Neel Nanda) இதுகுறித்து கூறுகையில், AI காரணமாக மனிதகுலம் அழிய குறைந்தது 10 சதவீத வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments
No comments yet — be the first.